கீதா ஜயந்தி விழா

X
Komarapalayam King 24x7 |30 Nov 2025 8:22 PM ISTகுமாரபாளையத்தில் அறம் வளர்த்த நாயகி சேவை மையம் சார்பில் கீதா ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது.
குமாரபாளையத்தில் அறம் வளர்த்த நாயகி சேவை மையம் சார்பில் கீதா ஜயந்தி விழா ஆனந்தாஸ்ரமம் கவுரவ தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. நிர்மலா திருவிளக்கு ஏற்றி வைத்தார். ஜெயபிரகாஷ் பேசியதாவது: அர்ஜுனனுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர், பகவத்கீதையை உபதேசித்த நாள், கீதா ஜயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இறைவன் திருநாமத்தை சொன்னால் நம் கஷ்டங்கள் தீரும். இவ்வாறு அவர் பேசினார். பக்தர்களால் கீதா உபதேசம் பாராயணம் செய்யப்பட்டது. இதில் ஸ்ரீமத் பரமஹம்சேத்யாதி சுவாமிகள், சுயம்ப்ரசானந்த சரஸ்வதி சுவாமிகள், சிரத்தானந்தா சுவாமிகள், பாலாகுப்புசாமி, பிரேமசந்திரன், சிவதங்கராஜ், மோகனா, உள்பட பலர் பங்கேற்று பேசினர்.
Next Story
