ராசிபுரத்தில் சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளையின் சார்பில் திருவாசக முற்றோதல்...

X
Rasipuram King 24x7 |30 Nov 2025 9:35 PM ISTராசிபுரத்தில் சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளையின் சார்பில் திருவாசக முற்றோதல்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் ஆலயம் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டியும், திருமணத் தடை உள்ளவர்கள் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறவும், மக்களுக்கு இருக்கிற இன்னல்கள் இயங்கவும் கல்வி பயிலும் மாணவச் செல்வங்கள் நன்றாக படிக்கவும், கைலாசநாதர் சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளையின் சார்பில் திருவாசக முற்றோதல் நடைபெற்றது. இதில் தலைவர் சிவ மோகன், துணை தலைவர் சிவ கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் சிவ வடிவேல், தலைமையில் திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு இறையருள் திருவாசகம் பாடி ஸ்ரீ கைலாசநாதர் மற்றும் 63 நாயன்மார்கள் சாமியை வழிபட்டனர். பின்னர் இந்த கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்க வந்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா மதிவேந்தன் , கைலாசநாதர் சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை நிர்வாகிகள் சந்தித்து நிகழ்ச்சியை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அமைச்சருக்கு நிர்வாகிகள் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர்.
Next Story
