ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் கண்களில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம்

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் கண்களில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்
கடந்த இரண்டாயிரத்தி ஆறாம் ஆண்டு ஐநா சிறப்பு மாநாட்டு  பிரகடனம் மற்றும் இந்திய நாட்டின் ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016 ஆகியவை மாற்றுத்திறனாளிகளுக்கான கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்கிறது மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி வேலை வாய்ப்பு வேலையில்  இடது ஒதுக்கீடு. தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு, பாகுபாடு காட்டாமை, சமூக பாதுகாப்பு சுகாதாரம், மறுவாழ்வு மற்றும் பொழுதுபோக்கு, சிறப்பு திட்டங்கள், சிறப்பு நீதிமன்றங்கள், மற்றும் அனைத்து இடங்களையும் எளிதில் அணுகத்தக்க தடையற்ற சூழல் உள்ளிட்ட மேற்கூறிய உரிமைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுவதற்கு ஒன்றிய அரசு தேசிய அளவில் ஒரு நிதியத்தை ஏற்படுத்த வேண்டும் இந்தச் சட்டம் இயற்றப்பட்டு  5 ஆண்டுகளுக்குள் அனைத்தும் அமல்படுத்திட வேண்டும் ஆனால் இந்த சட்டம் இயற்றப்பட்டு ஒன்பது ஆண்டுகள் ஆன பின்பும் ஒரு சிறு நிதியை கூட மோடி அரசு இதனால் வரை வழங்கவில்லை இதனால் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மாற்றுத் திறனாளிகளுக்கு எட்டாக்கனியாக உள்ளது மாற்றுத்திறனாளிகளுக்கு வெறும் .0025 சதவீத தொகையை தான்   ஒதுக்குகிறது எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை ஒன்றிய அரசு செய்து கொடுக்க வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகை உயர்த்த வலியுறுத்தியும் வீடு இல்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு வழங்க வலியுறுத்தியும் இன்று திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் நாகேஸ்வரி தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் எம் ஆர் முருகேசன் முன்னிலை வகித்தார் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய அங்கீகாரமும் உதவித்தொகையும் வசதிகளும் செய்து தர வேண்டும் என்று போராட்டத்தின் போது கோரிக்கை வைக்கப்பட்டது இந்த ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்
Next Story