ஆய்குடியில் போக்குவரத்துக்கு இடையூறான ஆலமரம் அகற்ற மதிமுக கோரிக்கை

ஆய்குடியில் போக்குவரத்துக்கு இடையூறான ஆலமரம் அகற்ற மதிமுக கோரிக்கை
X
போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஆலமரத்தை அகற்ற மதிமுக கோரிக்கை
தென்காசி மாவட்டம் ஆய்க்குடிக்கு கீழ் புறம் ஆலமரம் ஒன்று போக்குவரத்திற்கு இடையூறாக விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் நின்று கொண்டிருக்கிறது. இதனால் அந்த இடம் விபத்துகள் நிறைய நடக்கும் இடமாக மாறிவருகிறது.இன்றும் சற்று முன் லாரி ஒன்று தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது காவல்துறை போக்குவரத்தை சரிசெய்து கொண்டிருக்கிறார்கள். இந்த மரம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானதாகும்.உடனே மரத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் இராம உதயசூரியன் கோரிக்கை விடுத்துள்ளார்
Next Story