காளியம்மன் கோவில் மண்டபத்திற்கு டேபிள், பென்ச் வழங்கிய முன்னாள் விழாக்குழுவினர்

X
Komarapalayam King 24x7 |1 Dec 2025 8:35 PM ISTகுமாரபாளையம் காளியம்மன் கோவில் மண்டபத்திற்கு முன்னாள் விழாக்குழுவினர் டேபிள், பென்ச் வழங்கினர்.
குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் போதுமான டேபிள், பென்ச் இல்லாமல் இருந்தது. இதையறிந்த முன்னாள் திருவிழாக்குழுவினர், மண்டபத்திற்கு தேவையான 25 டேபிள்கள், 23 பெஞ்சுகள் நன்கொடையாக வழங்க முடிவு செய்தனர். அதன்படி அதற்கான விழா காளியம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. விழாக்குழு தலைவர் வழக்கறிஞர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். கோவில் செயல் அலுவலர் குணசேகரன் வசம் 25 டேபிள்கள், 23 பெஞ்சுகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இதில் எக்ஸல் கல்வி நிறுவன தாளாளர் நடேசன், தொழிலதிபர்கள் அர்த்தனரிசாமி, சண்முகம், ரவி, புருஷோத்தமன், கோபாலகிருஷ்ணன், தண்டபாணி, சிவக்குமார், உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
