கடையநல்லூர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் நிவாரண தொகை வழங்கினார்

கடையநல்லூர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் நிவாரண தொகை வழங்கினார்
X
கடையநல்லூர் பஸ்கள் மோதிய விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடையநல்லூர் அருகே உள்ள இடைகாலில் நடந்த தனியார் பேருந்துகள் மோதிய விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும்‌ படுகாயமுற்றவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் நிவாரண உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது இதில் நிவாரண தொகைக்கான காசோலை தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் முன்னிலையில் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வழங்கினார் நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே_ஜெயபாலன் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ வாசுதேவநல்லூர் எம்எல்ஏ சதன் திருமலைக்குமார் உட்பட திமுக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்
Next Story