ஆசிரியர்களுக்கு பசுமை பாதுகாவலர் மற்றும் பசுமை ஆசிரியர் விருது

X
Komarapalayam King 24x7 |1 Dec 2025 10:05 PM ISTகுமாரபாளையத்தில் மரக்கன்றுகளை வளர்க்கும் குழந்தைகள், ஊக்குவிக்கும் ஆசிரியர்களுக்கு பசுமை பாதுகாவலர் மற்றும் பசுமை ஆசிரியர் விருது வழங்கப்பட்டது.
குமாரபாளையத்தில் மரக்கன்றுகளை நடுவது, மற்றும் பசுமை பணிகளில் ஈடுபடும் மாணவ- மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு பசுமைப் பாதுகாவலர் விருதும்,மாணவர்களை ஊக்குவிக்கும் ஆசிரியர்களை சிறப்பிக்கும் பொருட்டு பசுமை ஆசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி தளிர்விடும் பாரதம் தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது. தமிழகம் முழுவதும் உள்ள சுமார் மூவாயிரம் பேருக்கு தருமபுரி பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் இவ்விருது வழங்கி வருகிறார்கள். அதனையொட்டி தளிர்விடும் பாரதம் சார்பில், குமாரபாளையம் நகரைச் சார்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பசுமை பணியில் சிறந்து விளங்கும் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேற்கு காலனி, நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை கௌசல்யா மணி, நாராயணநகர் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை பாரதி, தர்மதோப்பு வாசுகிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை (பொறுப்பு) அமுதா, சி.நா.பாளையம் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை (பொறுப்பு) ராமலட்சுமி, ஐன்ஸ்டீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் விஜயபிரபு முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது. நிர்வாகி தமிழ்செல்வி நன்றி கூறினார்.
Next Story
