தென்காசி மாவட்டத்தில் இன்று என்ன நடந்தது டாப் டென்

X
Tenkasi King 24x7 |1 Dec 2025 10:09 PM ISTதென்காசி மாவட்டத்தில் இன்று நடந்த டாப் டென் செய்திகள்
தென்காசி மாவட்டத்தில் டிசம்பர் 1ம் தேதி நடந்த டாப் நிகழ்வுகள் 1. தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கலெக்டர் தலைமையில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 415 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. 2. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட துரைச்சாமிபுரம் பகுதியில் நவம்பர் 24ஆம் தேதி நடைபெற்ற தனியார் பேருந்து விபத்தில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு இன்று தென்காசி பொறுப்பு அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தமிழக அரசு அறிவித்த உதவித்தொகையின் காசோலையை பாதிப்படைந்த மக்களை சந்தித்து வழங்கினார். உடன் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 3. திருநெல்வேலியில் இருந்து தென்காசி வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் வாராந்திர ரயிலை இரண்டு மாதங்கள் ரயில்வே நிர்வாகம் நீட்டித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 9:00 மணிக்கு தென்காசி ஜங்ஷன் பகுதியில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை 7:30 மணியளவில் மேட்டுப்பாளையம் சென்றடையும். இந்த ரயில் சேவையை நிரந்தரமாக நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 4. இன்று கார்த்திகை மாத மூன்றாவது சோமவார நிகழ்ச்சியை முன்னிட்டு ஏராளமான சுமங்கலி பெண்கள் குற்றாலத்தில் புனித நீராடி சுமங்கலி பூஜையில் ஈடுபட்டனர். 5. சாம்பவர் வடகரை பகுதியில் அமைந்துள்ள சாம்பமூர்த்தி திருக்கோவிலில் இன்று மூன்றாவது சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. 6. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட செங்கோட்டை, வடகரை, சுரண்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு டிசம்பர் 6 சனிக்கிழமை மின் மாதாந்திர பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்மினி யோகம் தடைபடும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. 7. தென்காசி மாவட்டம் பண்பொழி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு திருமலை குமாரசுவாமி கோவிலில் டிசம்பர் 3 புதன்கிழமை மாலையில் மாலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 8. மேல கலங்கல் பகுதியில் 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற கட்டிடத்தை இன்று ஆலங்குளம் சேர்மன் திவ்யா மணிகண்டன் திறந்து வைத்தார். 9. தென்காசி முக்கிய நகர் பகுதிகளில், குறிப்பாக கூலக்கடை பஜார் பகுதிகளில் சாலைகள் சரி வர அமைக்கப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் மிகுந்த சிரமமாக இருந்து வருகிறது. 10. தென்காசியில் 16 புதிய நகரப் பேருந்துகள் ரூ.8 கோடி மதிப்பில் வாங்கப்பட்ட 16 நகரப் பேருந்துகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்று தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
Next Story
