அரசுப் பள்ளியில் நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி.

X
NAMAKKAL KING 24X7 B |1 Dec 2025 11:14 PM ISTபரமத்தி வேலூர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், நாட்டு நலப்பணித் திட்ட தொடர் நிகழ்வு
செயல்பாடாக உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி பள்ளி செயலாளர் க. செல்வராசு தலைமையில் தலைமையாசிரியை திருமதி சி. சித்ரா முன்னிலையில் மாவட்ட NEET ஒருங்கிணைப்பாளர் மற்றும் கரூர் மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட தொடர்பு அலுவலர் யுவராஜ் கருத்தாளராக பங்கு பெற்று அறிவியல் பிரிவு மாணவிகளுக்கு NEET தேர்வு வழிமுறைகள் மற்றும் பல்வேறு துணை மருத்துவ படிப்புகள், கல்லூரிகள், வேலைவாய்ப்புகள், TNPSC, TRB போன்ற பல பயனுள்ள தகவல்கள் குறித்த விளக்கங்கள் பற்றி தெளிவாக எடுத்துரைத்தார். மாணவிகளின் சந்தேகங்கள், கேள்விகள் கலந்துரையாடல் மூலம் தெளிவு பெறப்பட்டது.மேலும் மருத்துவ படிப்பு ஏழை மாணவிகள் இலவசமாக பயில வழிவகை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியை நாட்டு நலப்பணிதிட்ட அலுவலர் முனைவர் து. பிரியங்கா ஏற்பாடு செய்தார்.
Next Story
