ஆரணி நகரமன்ற கூட்டத்தில் அதிமுக, மதிமுக கவுன்சிலர்கள் புறக்கணிப்பு.

X
Arani King 24x7 |1 Dec 2025 11:37 PM ISTஆரணி நகரமன்ற கூட்டம் நடைபெற்றதில் புதிய பஸ்நிலையத்தை இடிக்கும் பணிக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் வியாபாரிகளுக்கு ஆதரவாக அதிமுக மற்றும் மதிமுக நகரமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பு செய்தனர்.
ஆரணி நகரமன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி தலைமை-யில் நடைபெற்றது. இதில் ஆணையாளர் என்.டி.வேலவன் முன்னிலை வகித்தார். இந்நிலையில் ஆரணி நகராட்சி சார்பில் ஆரணி புதிய பஸ் நிலையம் சீரமைப்பதற்காக இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு தீர்மானம் நிறைவேற்றினர். இதற்கு ஆரணி பகுதி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் வியாபாரிகளுக்கு ஆதரவாக ஆரணி நகரமன்ற கூட்டத்திற்கு அதிமுக நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதிமுக நகரமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர். இதனால் ஆரணி நகரமன்ற கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலைசிறுத்தைகள் கட்சிகளைச்சேர்ந்த 10 பேர் மட்டுமே கலந்துகொண்டு கூட்டத்தை நடத்தினர். மேலும் இதில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் ஒருவர் என 11 பேர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் ஆரணி நகராட்சி பகுதியில் வாக்காளர் பட்டில் தீவிர திருத்தம் பணிகளுக்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தினசரி வீடுகள்தோறும் சென்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணிநடைபெற்று வருவதால் பணியாளர்களுக்கு ரூ.5லட்சம் ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றினர். மேலும் ஆரணி நகராட்சியி்ல பணிபுரியும் 232 துப்புரவு பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க ஒப்பந்தம் வைத்தும், ஆரணி புதிய பேருந்து நிலைய கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்தும் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி வைத்தும், ஆரணி நகராட்சி வளாக கட்டிடத்திற்கு வர்ணம் பூசும் பணிக்காகவும், நகராட்சி ்அலுவலக்தில் உள்ள அண்ணாசிலையை பராமரிக்கும் பணிக்காகவும், சுற்றியுள்ள செடி, கொடிகளை அகற்றி புதிய மரக்கன்றுகள் நடும் பணிக்காகவும் ஒப்பந்தம் விடப்பட்டது.
Next Story
