மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்.

ஆரணி அண்ணா சிலை அருகில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் கண்களில் கருப்பு துணி கட்டி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்
ஆரணி அண்ணா சிலை அருகில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் கண்களில் கருப்பு துணி கட்டி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர். மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்பு உதவித்தொகை மத்திய அரசின் பங்காக மாதம் ரூபாய் 5000 வழங்க வேண்டும், 100 நாள் வேலைக்கான நிதியை கூடுதலாக்கி 200 நாள் வழங்கிட வேண்டும், கல்வி வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், மாற்று திறனாளிகள் பிரச்சனைகளை கலைய நிதி ஆணையத்தை உருவாக்க வேண்டும், மாற்று திறனாளிகளுக்கு 35 கிலோ அரிசி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்களில் கருப்பு துணி கட்டி ஆரணி அண்ணா சிலை அருகில் மாற்றுத்திறனாளிகள் கண்களில் கருப்புத்துணை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் சி.ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஆர்.சிவாஜி கண்டன உரையாற்றினார். மாவட்ட பொருளாளர் பி.சத்யா, மாவட்ட துணைத் தலைவர்கள் ஏ.சந்திரசேகர், கே.அண்ணாமலை, வி.திவ்யா மற்றும் ஆரணி கிழக்கு, மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். .
Next Story