நாமக்கல் அலையன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

நாமக்கல் அலையன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!
X
சிறப்பு விருந்தினர்களாக ஶ்ரீவில்லிபுத்தூர் அலையன்ஸ் கிளப் தலைவர் இராஜசேகர் மற்றும் நாமக்கல் பசுமை மா.தில்லை சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
நாமக்கல்லில் அலையன்ஸ் கிளப் துவங்கப்பட்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப் பட்டது.சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நாமக்கல் டேபிள் ட்ரீ ரெஸ்டாரன்டில் நடைபெற்றது.புதிய நிர்வாகிகளுக்கு சவுத் மல்டிபில் கவுன்சில் சேர்மன் சரவணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.புதிய தலைவராக சக்திவேல் ,செயலாளராக கார்த்திகேயன், பொருளாளராக ஜெகதீஸ்வரி மற்றும் துணைத் தலைவர்களாக இன்ஜினியர் மணி, தங்கராஜ் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அலையன்ஸ் கிளப் நாமக்கல் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் பதவி ஏற்றனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக ஶ்ரீவில்லிபுத்தூர் அலையன்ஸ் கிளப் தலைவர் இராஜசேகர் மற்றும் நாமக்கல் பசுமை மா.தில்லை சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இவ்விழாவில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்,பதக்கங்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் கோகுலபிரியா தொகுத்து வழங்கினார்.துணைத் தலைவர் தங்கராஜ் நன்றி கூறினார்.
Next Story