கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

X
Tenkasi King 24x7 |2 Dec 2025 7:36 PM ISTகடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்
கடையநல்லூர் அருகே மேலக்கடையநல்லூர் பகுதிகளில் குடிநீர் வினியோகம் நகராட்சி நிர்வாகத்தால் முறையாக மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்து நகராட்சி பொறியாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். கடையநல்லூர் நகராட்சி பகுதி மக்களுக்கு பெரியாற்று படுகையில் இருந்தும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாகவும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் மேலக்கடையநல்லூர் அனைத்து பகுதிக்கும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்திலான குடிநீர்தான் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் மழை உள்ளத்தால் ஆற்று படுகையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையிலும், தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தாமிரபரணியில் இருந்து தேவையான அளவு குடிநீர் வராததால் கடையநல்லூர் பகுதியில் குடிநீர் பிரச்சினை கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக காணப்பட்டு வருகிறது. வால்வு பராமரிப்பு, குழாய் உடைப்பு சீரமைப்பு என்பது போன்ற பல்வேறு காரணங்களை முன்வைத்து குடிநீர் விநியோகம் தடைப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டாக உள்ளது இதனையில் நகராட்சிக்குட்பட்ட மேல கடையநல்லூர் பகுதியில் கடந்தபல நாட்களாக குடிநீர் வினியோகம் இப்பகுதியில் அமைந்துள்ள வார்டுகளில் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்தின் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது சில பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் அதனை சீர் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனிடையில் மேலக் கடையநல்லூரைச் சேர்ந்த ஏராளமான பெண்களும் நகராட்சி அலுவலகத்தில் திரண்டனர். குடிநீர் விநியோகம் தொடர்பாக புகார் தெரிவிக்க அதிகாரிகள் இல்லாததை அறிந்த நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டுமென முறையிட்டனர். இதனிடையில் கடையநல்லூர் நகராட்சிக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் நாள் ஒன்றிற்கு விநியோகம் செய்யப்பட வேண்டிய 33 லட்சம் லிட்டர் குடிநீர் தற்போது 10 லட்சம் லிட்டர் தான் வரப்படுவதாக நகராட்சி பொறியாளர் தரப்பில் கூறப்பட்டது எனவே மேலக்கடையநல்லூர் பகுதிக்கு பெரியாற்று படுகையின் மூலமாக குடிநீர் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி தரப்பில் கூறப்பட்டது. தொடர்ந்து பேசிய பொதுமக்கள் தங்களுக்கு நள்ளிரவு நேரத்தில் நகராட்சி மூலமாக குடிநீர் விநியோகத்தை முற்றிலுமாக தவிர்த்து பகல் வேளையில் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் எனவும், நகராட்சி குடிநீர் விநியோகத்தை 4 மண்டலமாக பிரித்த பிறகு தான் இது போன்ற பிரச்சனை தலைதூக்கி இருப்பதாகவும், பொதுமக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ஏற்கனவே கடையநல்லூர் நகராட்சியின் குடிநீர் பிரச்சனைக்கு 4 மண்டலமாக பிரித்த பிறகு தான் அதிகமான வார்டுகளில் இப்பிரச்சனை தலை தூக்கி இருப்பதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டு வரும் நிலையில் மேலக்கடையநல்லூர் பகுதி மக்கள் நேற்று அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததையடுத்து இந்த பிரச்சனையும் நேற்று விஸ்வரூபம் எடுத்தது. குடிநீர் கேட்டு நகராட்சி பொறியாளர் அலுவலகத்தை மேலக் கடையநல்லூர் பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டதால் சுமார் இரண்டரை மணி நேரம் பெரும் பரபரப்பு காணப்பட்டது. சம்பவ இடத்திற்கு கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி ,சப் இன்ஸ்பெக்டர் சம்சுதீன் ஆகியோர் பொதுமக்கள் இடம் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியாக கலைந்து போகச் செய்தனர்
Next Story
