நின்று கொண்டிருந்தவர் மீது டூவீலர் மோதியதில் ஒருவர் படுகாயம்

நின்று கொண்டிருந்தவர் மீது டூவீலர்  மோதியதில் ஒருவர் படுகாயம்
X
குமாரபாளையத்தில் நின்று கொண்டிருந்தவர் மீது டூவீலர் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்தார்.
குமாரபாளையம் வட்டமலை பகுதியில் வசிப்பவர் மணிகண்டன், 33. தச்சு வேலை. இவர் நவ. 25, இரவு 08:15 மணியளவில் சேலம் கோவை புறவழிச்சாலையில் கே.ஓ.என்.தியேட்டர் பிரிவு அருகே டீக்கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, ஹோண்டா யூனிகார்ன் டூவீலரில் வந்த நபர், இவர் மீது வேகமாக மோத, மணிகண்டன் பலத்த காயமடைந்தார். இவர் பவானி தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான டூவீலர் ஓட்டுனர் சேலம் தச்சு தொழிலாளி, சதீஸ்குமார், 53, என்பவரை கைது செய்தனர்.
Next Story