மகா கும்பாபிஷேக விழா பட்டிமன்றம்
Komarapalayam King 24x7 |2 Dec 2025 9:31 PM ISTகுமாரபாளையம் திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள அருள்மிகு மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி பட்டிமன்றம் நடந்தது.
குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள அருள்மிகு மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர், அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத சௌந்தர்ராஜ பெருமாள், அருள்மிகு பஞ்சமுக மகாவீரா ஆஞ்சநேயர் திருக்கோவில் புனராவர்த்தன மகா கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் துவங்கியது. பவானி சங்கமேஸ்வரர் கோவில் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தகுடங்கள் எடுத்து வரப்பட்டு யாக சாலை பூஜைகள் நடந்தன. நேற்றுமுன்தினம் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. திண்டுக்கல் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள், ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள், திருவண்ணாமலை கருடானந்தா மகராஜ் சரஸ்வதி சுவாமிகள், ஈரோடு ஸ்ரீ விஜய சுவாமிஜி, தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தங்கமணி உள்பட பலர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். மகா கும்பாபிஷேக விழாவையொட்டி நடுவர் கலைமாமணி ஞானசம்பந்தம் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. இறைவனை அடைய சிறந்த நெறி பக்தி நெறி என்ற தலைப்பில் பேச்சாளர்கள் சிதம்பரம், ஸ்ரீமதி தியாகராஜன் ஆகியோரும், தொண்டு நெறியே எனும் தலைப்பில் செல்லககண்ணன், பொன்பூங்கொடி ஆகியோரும் பேசினர்.. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Next Story


