மின் கம்பியில் சிக்கி சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்த மயில்

X
Tiruvallur King 24x7 |3 Dec 2025 8:31 AM ISTபள்ளிப்பட்டு அருகே மின் கம்பியில் சிக்கி மயில் சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தது. பள்ளிப்பட்டு அருகே நொச்சிலி காப்புக் காட்டில் மயில் பறந்தபோது உயர் மின் அழுத்த கம்பியில் சிக்கி உயிரிழப்பு.
பள்ளிப்பட்டு அருகே மின் கம்பியில் சிக்கி மயில் சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தது. பள்ளிப்பட்டு அருகே நொச்சிலி காப்புக் காட்டில் மயில் பறந்தபோது உயர் மின் அழுத்த கம்பியில் சிக்கி உயிரிழப்பு. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே நொச்சிலி அருகே உள்ள காப்பு காட்டில் மான் மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளது. அவ்வப்போது காப்புக்காட்டில் இருந்து தண்ணீர் குடிக்க வெளியே வரும்போது சாலையில் செல்லும் வாகனங்களில் சிக்கி விபத்து ஏற்பட்டு உயிரிழந்து வருகிறது. காப்புக்காடு சுற்றி உள்ள சாலை ஓரங்களில் வனத்துறை அதிகாரிகள் வேலி அமைக்காததால் இதுபோன்ற விபத்துகளில் சிக்கி உயிரிழந்து வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் இன்று காப்புக் காட்டில் இருந்து மயில் பறந்து சென்ற போது அப்போது சாலை ஓரமாக இருந்த உயர் அழுத்த மின்கம்பியின் மீது சிக்கி மின்சாரம் பாய்ந்து துடித்து துடித்து சம்பவ இடத்தில் உயிரிழந்தது.இதைப் பார்த்த கிராம மக்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக வந்ததாக கிராம மக்கள் குற்றச்சாட்டு. பின்னர் உயிரிழந்த மயிலை மீட்டு கால்நடை மருத்துவரிடம் பிரேத பரிசோதனைக்காக வனத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க வனத்துறை அதிகாரிகள் காப்புக்காட்டு சுற்றி வேலி அமைத்து வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story
