ராமநாதபுரம் கொட்டும் மலையிலும் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது

ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையில் தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் இழப்பீடு வழங்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம்கொட்மும் கன மழையில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டட்டம் நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் அதித கனமழை மற்றும் பருவம் தவறிய மழையினால் மீண்டும் முளைத்த நெல்லுக்கு ஓராண்டாகியும் ஏக்கர் ஒன்றுக்கு 8,000 அரசு வழங்க வேண்டும், ராமநாதபுரம் மாவட்டத்தை இயற்கை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் கன மழையையும் பொருட்படுத்தாமல் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் பகுதியில் அமர்ந்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story