டித்வா புயலால் மீண்டும் மழை... இரும்புத்தலை பகுதியில் சம்பா, தாளடி பயிர்கள் பாதிப்பு

X
Thanjavur King 24x7 |3 Dec 2025 3:53 PM ISTஇரும்புத் தலை மற்றும் சுற்றுப்பகுதியில் மழை நீரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது.
தஞ்சாவூர், டிசம்பர் 3- தஞ்சாவூர் மாவட்டம் இரும்புத்தலை பகுதியில் மீண்டும் மழை பெய்தால் வயலில் தேங்கி நிற்கும் தண்ணீர் வடியாமல் 200 ஏக்கரில் சம்பா, தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் டித்வா புயலால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கனமழை தொடர்ந்து பெய்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மழை நின்றது. இருப்பினும் நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால் வயலில் தேங்கி உள்ள மழை நீர் வடியாமல் இரும்புதலை மற்றும் சுற்று வட்டார பகுதியில் 200 ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. டித்வா புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் நான்கு நாட்கள் தொடர் கன மழை பெய்தது. பின்னர் கடந்த 2 நாட்களாக மழை இல்லை. இந்நிலையில் நேற்று இரவு முதல் தஞ்சை மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்து வருவதால், வயல்களில் மழை நீர் வடியாமல் மெலட்டூர் அருகே இரும்புதலை பகுதியில் 200 ஏக்கர் சம்பா, தாளடி இளம் நடவு பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதனால் பயிர்கள் அழுகி உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடன் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story
