நவோதயா பள்ளி மாணவர்கள் மாவட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை.

நாமக்கல் தி நவோதயா அகாடமி சீனியர் செகணடரி பள்ளியில் பயிலும் மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று சாதனைப்படைத்துள்ளனர்.

தமிழ்நாடு “சனுக்தா பாரதிய கேல் பவுண்டேசன்” நடத்திய 5ஆவது மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் நவோதயா பள்ளி மாணவி வேதாஸ்ரீவர்ஷா எட்டு வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் மூன்றாவது பரிசுபெற்றுள்ளார். மேலும் மாநில அளவில் நடைபெற்ற “அஷிகாரா கராத்தே” போட்டியில் மாணவி வேதாஸ்ரீவர்ஷா கலந்துகொண்டு இரண்டாவது பரிசைப்பெற்றுள்ளார். மேலும் “எஸ்ஐபி” நிறுவனம் சென்னையில் நடத்திய பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அபாக்கஸ் போட்டியில் நவோதயா பள்ளி மாணவர் ஆதேஷ் தேவா கலந்துகொண்டு 12 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் மூன்றாவது பரிசை பெற்றுள்ளார். மாணவி எஸ்.ஆர். அனுவர்ஷினி கலந்துகொண்டு இரண்டாவது சுற்று வரை சிறப்பாக விiளாயடி சான்றிதழ் பெற்றுள்ளார்.; நாமக்கல்லில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியை “இராயல் கிங் செஸ் அகாடமி” நடத்தியது அதில் நமது நவோதயா அகாடமி மாணவன் தமிழினியன் 12 வயதிற்கு உட்பட்டோர் பிரில் கலந்துகொண்டு 7 புள்ளிகளைப் பெற்று சாதனை வெற்றி பெற்றுள்ளார்.அனைவருக்கும் பள்ளியில் நடைபெற்ற வழிபாட்டுக் கூட்டத்தில் பள்ளியின் பொருளாளர் கா. தேனருவி சான்றிதழ் மற்றும் மெடல் அணிவித்து வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். குழந்தைச்செல்வங்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த அவர்களின்வெற்றிக்கு துணை நிற்கும் பெற்றோர்களையும் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தார். பள்ளி முதல்வர், இருபால் ஆசிரியப் பெருமக்கள், சகமாணவ, மாணவிகள் அனைவரும் வாழ்த்துகளையும், பாரட்டுகளையும் தெரிவித்தனர்.

Next Story