லாரி மீது மோதிய பஸ் அதிர்ஷ்டவசமாகஉயிர் தப்பிய பயணிகள்

X
Sangagiri King 24x7 |3 Dec 2025 6:43 PM ISTதனியார் சொகுசு பஸ் முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினார்கள்
சங்ககிரி அருகே தனியார் சொகுசு பேருந்து முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்தானதில் 22 பயணிகள் சிறு காயங்களுடன் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினர் சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி(48). தனியார் சொகுசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று இரவு 7:30 மணிக்கு 22 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மங்கரம்பாளையம் என்ற இடத்தில் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சொகுசு பேருந்தின் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்தது. அதில் பயணிகள் அனைவரும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர். மேலும் சம்பவம் அறிந்து வந்த சங்ககிரி போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
