பட்டியல் இன மக்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வரும் ஸ்டாலின்அரசு திருச்செங்கோட்டில் விலையில்லா மிதிவண்டிகள்வழங்கியபின் அமைச்சர் மதிவேந்தன் பேட்டி

X
Tiruchengode King 24x7 |3 Dec 2025 7:25 PM ISTபட்டியல் இன மக்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருவது ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு ஏதோ குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசிக்கொண்டு உள்ளார்.விலையில்லா மிதிவண்டிகள்வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் மதிவேந்தன் பேட்டி
தமிழ்நாடு அரசின்பள்ளிக் கல்வித்துறை பிற்படுத்தப் பட்டோர் மிகப் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில்ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது அதன்படி 2025 26 ஆம் ஆண்டுக்கான திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 22 பள்ளிகளைச் சேர்ந்த 1024 மாணவிகள் 1096 மாணவர்கள் என 2120 மாணவ மாணவிகளுக்குமிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எழிலரசி வரவேற்றார்சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார் நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் பரமத்தி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் மூர்த்தி திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு திருச்செங்கோடு மேற்கு நகர திமுக செயலாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன் கிழக்கு நகர திமுக செயலாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன்,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் ராயல் செந்தில் நகர செயலாளர் குமார், திருச்செங்கோடுவடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வட்டூர் தங்கவேல் மத்திய ஒன்றிய செயலாளர் அருண் தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன் எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் நகர் மன்ற உறுப்பினர்கள்அண்ணாமலை ராஜா முருகேசன் புவனேஸ்வரி உலகநாதன் செல்வி ராஜவேல் கலையரசி சண்முகவடிவு தாமரைச்செல்வி மணிகண்டன் திவ்யா வெங்கடேஸ்வரன் பள்ளி மேலாண்மை குழுதலைவர்அம்பிகா மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் பாலாஜி ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு சிறப்பு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள். நமது திராவிட மாடல் ஆட்சியில் மாணவ, மாணவியர்கள் சமுதாயத்தில் கல்வி அறிவு, வேலைவாய்ப்பு பெற்று அதன் மூலம் சிறந்த வாழ்வாதாரத்தை பெற்றிட வேண்டும் என்ற நோக்கத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். புதிய முயற்சிகள் மூலமாக பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வி துறை, தொழில் துறைகளில் கல்வியை அடிப்படையாக கொண்டு, வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் வளர்ச்சியை நிகழ்த்தியுள்ளார்கள். கொரோனா தொற்று காலத்தில், மாணவர்களின் கல்வி தடைபடக்கூடாத என்பதற்காக அவர்களின் இல்லத்திற்கே வந்து கல்வியை வழங்கும் இல்லம் தேடி கல்வி திட்டத்தினை அறிமுகப்படுத்தினார்கள். அதேபோல எண்ணும் எழுத்தும் திட்டம், நான் முதல்வன் வழிகாட்டி திட்டம், முதலமைச்சர் கோப்பை, விளையாட்டு மைதானம், பள்ளி குழந்தைகள் நூலகங்களை திறம்பட பயன்படுத்துவதற்காக சிறந்த முறையில் மாநிலம் முழுவதும் பல்வேறு நூலகங்கள், ஊராட்சிகளில் சிறிய நூலகங்கள் என பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் கல்வியில் முன்னேற வேண்டும் என்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அரசு மாணவ, மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லும் திட்டத்தினை வழங்கியவர் நமது முதலமைச்சர் அவர்கள். இதன் மூலம் அரசு மாணவர்கள் விமானத்தில் வெளி நாடுகளுக்கு அழைத்து சென்று அங்குள்ள உயர்ந்த பல்கலை கழகத்தில் பல அறிவு சார்ந்த செய்திகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனக்கூறினார் நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்திரன் கூறியதாவதுபட்டியல் இன மக்களுக்கு கலைஞர் அரசும் ஸ்டாலின் அரசும் சிறப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது அது மட்டுமல்லாது இன்றுஉலக மாற்றுத்திறனாளிகள்கொட்டி ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கி தமிழ்நாடு ரைஸ் என்ற திட்டத்தை உருவாக்கி மாநில முழுக்க ஆய்வு செய்து குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட தன்னார்களிடம் ஆய்வு செய்து மாற்றுத்திறனாளிகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்னென்ன தேவை என்பதை கண்டறிந்துகூடுதலாக விரிவாக்கத் திட்டங்களை அமல்படுத்த உள்ளனர் நகராட்சியில் மாற்றுத்திறனாளி ஒருவரை நியமன உறுப்பினர் ஒருவரை நியமித்து சமூக அந்தஸ்தை ஏற்படுத்தி தந்துள்ளது திராவிட மாடல் அரசு மாற்றுத்திறனாளிகள் என்ற பெயரை உருவாக்கிமாற்றுத்திறனாளிகளுக்கான நல வாரியம் அமைத்ததும் திராவிட மாடல் அரசு தான் பேருந்து பயண கட்டணம் இலவசம் உடன்பயணிப்பவருக்கும் கட்டணம் இல்லை என அறிவித்து செயல்படுத்தி வருவதுதிராவிட மாடல அரசு பட்டியல் இன மக்களுக்கு அயோத்திதாசர் பயரில் திட்டம் தீட்டி அடிப்படை வசதிகளை உருவாக்கி தர சிறப்பான பணிகளை செய்து வருவது தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல அரசாங்கம் காலணி என்ற பெயரை அகற்றி ஆதிதிராவிடர் நல விடுதிகள் என்பதை சமூக நல விடுதிகள் என பெயர் மாற்றம் செய்து அறிவித்ததும் 200க்கும் மேற்பட்ட சமுதாயக் கூட்டங்களை 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி சிறப்பாக அமைத்து தருவது ஆகிய பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அரசு செய்து வருகிறதுபாமக தலைவர் அன்புமணி ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காககுற்றம் சொல்கிறார் சமுதாயக்கூடங்களை விடுதிகளை ஆய்வு செய்துவிட்டு குற்றம் சொல்ல வேண்டும்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பட்டியலின மக்களின் பெருவாரியான வாக்குகளை பற்றி மீண்டும் ஸ்டாலின் அரசு அமையும் சட்டம் படித்தவர்களுக்கு இன்டர்ன்ஷிப் தொகையாக 10 ஆயிரம் வழங்கப்படுகிறது தாட்கோ லோனை பொறுத்தவரை மனுக்கள் தகுதியான வெயிலாக இருந்தால் வரிசைப்படி லோன் தரப்படுகிறதுபட்டியல் இன மக்கள் உயர்கல்வி மட்டுமல்லாது ஆயழக படிப்பு படிப்பதற்கு 36 லட்சம் வரை வழங்கப்படுகிறது இதன் மூலம் 150 க்கும் மேற்பட்டவர்கள் அயலக கல்வி படித்து சிறந்த நிலைக்கு வந்துள்ளனர் ஒவ்வொரு நடுத்தர குடும்பமும் தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் மூலம் 2500 வரை பலன் பெற்று வருகிறது அது மட்டுமல்லாது ஒரு குடும்பத்தில் ஒருவரோ அல்லது இருவரோ தமிழக அரசின் திட்டங்கள் மூலம் பயன் பெற்றவர்களாகத்தான் இருக்கிறார்கள் எனக் கூறினார்.
Next Story
