வெள்ளகோவிலில் காங்கிரஸ் கமிட்டி புனரமைப்பு கூட்டம்
Kangeyam King 24x7 |3 Dec 2025 7:32 PM ISTவெள்ளகோவிலில் காங்கிரஸ் கமிட்டி புனரமைப்பு கூட்டம் - 250க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள வெள்ளகோவிலில் காங்கிரஸ் கமிட்டியின் சங்கதன் ஸ்ரீதன் அபியான் அமைப்பு மறுசீரமைப்பு இயக்கம் திருப்பூர் வடக்கு மாவட்ட அளவிலான கூட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள வெள்ளமடை தனியார் மஹாலில் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு மாவட்ட கிராமகாமிட்டி பொறுப்பாளர் காங்கேயம் கே.சரவணன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக சங்கதன் ஸ்ரீதன் அபியான் அமைப்பு பொறுப்பாளரும் ஹரியானா மாநில முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக் தன்வர்ஜி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். காங்கிரஸ் கட்சி தேசிய செயலாளர் கோபிநாத் பழனியப்பன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கட்சியின் செயல்பாடு, மாவட்ட, வட்டார அளவில் நிர்வாகிகளின் பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. முன்னாள் மாநில இளைஞரணி செயலாளர் அசோக்குமார், தமிழ்நாடு வழக்கறிஞர் பிரிவு பொதுச்செயலாளர் மணி, வெள்ளகோவில் முன்னாள் வட்டார தலைவர் இந்துராஜ், டிஆர்.சுப்பிரமணி, காங்கேயம் முன்னாள் வட்டார தலைவர் முத்துசாமி உட்பட 250க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
Next Story



