மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் நரிக்குறவர் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி!

மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் நரிக்குறவர் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி!
X
நாமக்கல் நரிக்குறவர் காலனி பகுதியில் உள்ள இளம் பெண்கள் தையல் பயிற்சியை நன்கு கற்றுக்கொண்டு, எதிர்காலத்தில் தையல் தொழிலில் ஈடுபட்டு வருமானம் ஈட்ட முடியும்!
நாமக்கல் நரிக்குறவர் காலனி பகுதியில், திறன் இந்தியா திட்டத்தின் கீழ், நாமக்கல் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில், தையல் பயிற்சி மையம் திறப்பு விழா நடைபெற்றது.இதில் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை மக்கள் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் எஸ். சரவணன் வரவேற்றார்.மக்கள் கல்வி நிறுவனத்தின் தலைவர் எஸ்டிஎன் மஹிந்தர் மணி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட நாமக்கல் மாவட்ட தொழில் மைய அலுவலர் சி.எம். மகேஷ் குமார், அம்மையத்தின் சார்பில் வழங்கப்படும் மத்திய மாநில அரசுகளின் கடன் திட்டங்கள் மானிய விவரங்கள் சுயதொழில் பயிற்சிகள் குறித்து விளக்கம் அளித்து பேசினார்.தொடர்ந்து,மக்கள் கல்வி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் வடமலை, நாமக்கல் நரிக்குறவர் காலனி பகுதியில் உள்ள இளம் பெண்கள் தையல் பயிற்சியை நன்கு கற்றுக்கொண்டு, எதிர்காலத்தில் தையல் தொழிலில் ஈடுபட்டு வருமானம் ஈட்ட முடியும் என்றார்.இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மக்கள் கல்வி நிறுவனத்தின் பயிற்றுநர் ஆர்.ரேவதி, ஒருங்கிணைப்பாளர் வி.லதா பயிற்சியாளர்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
Next Story