பாலிடெக்னிக் தேர்வில் புதிய நடைமுறையில் முறைகேடு நடக்க வாய்ப்பு பழைய முறையை அமல்படுத்த கோரிக்கை

X
Komarapalayam King 24x7 |3 Dec 2025 7:49 PM ISTதமிழகம் முழுதும் பாலிடெக்னிக் தேர்வில் புதிய நடைமுறையில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளதாகவும், பழைய முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுதும் பாலிடெக்னிக் தேர்வில் புதிய நடைமுறையில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளதாகவும், பழைய முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. மாவட்ட விருந்தோம்பல் பிரிவு செயலர் வழக்கறிஞர் தங்கவேல் கூறியதாவது: மாநில அளவிலான அரசு மற்றும் பாலிடெக்னிக் அனைத்து கல்லூரிகளில் அரசு தெவ்வு நடக்கும் போது. வினாத்தாள்கள் அரசு சார்பில் கவரில் போடப்பட்டு, அதற்கு அரக்கு சீல் வைத்து, ஒவ்வொரு கல்லூரிக்கும் அனுப்பி வைப்பார்கள். தேர்வு நடைபெறும் அறைக்கு அந்த கவரை கொண்டுவந்து அனைவர் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு, வினாத்தாள்கள் மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்படும். ஆனால், நேற்று துவங்கிய அரசு தேர்வில், பழைய நடைமுறையை விட்டுவிட்டு, தேர்வு நாளில் காலை 09:00 மணியளவில் மெயில் மூலம் கேள்வித்தாளை அனுப்பி வைப்பதாகவும், அதன்பின் அதனை பிரிண்ட் எடுத்து, தேர்வு அறையில் மாணவர்களுக்கு வினியோகம் செய்யச் சொல்லி அரசு தரப்பில் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் முறைகேடுகள் நிறைய நடக்க வாய்ப்பு உள்ளது. செராக்ஸ் மிசின் சரியானதாக இருக்க வேண்டும், இணையதளஇணைப்பு கிடைக்க வேண்டும், தேர்வு நடைபெறும் ஒரு மணி நேரம் முன்னதாக கேள்வித்தாள் வெளியானால், பலரால், கேள்வித்தாள்கள் வெளியில் விட நேரிடும். இதனால் நன்கு படித்த மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கும், பாதிப்புக்கும் ஆளாவார்கள். ஆகவே, வினாத்தாள் அனுப்பும் முறை, தற்போதைய புதிய முறையை கைவிட்டு, பழைய முறையை கடைபிடிக்க வேண்டும். இதுதான் அனைவருக்கும் நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
