நாமக்கல்லில் நடைப்பெற்ற கொமதேக அவசர ஆலோசனை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு!

X
Namakkal King 24x7 |3 Dec 2025 7:55 PM ISTமோகனூர் ஒருங்கிணைந்த ஒன்றியம் சார்பாக பொதுக்கூட்டம் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, நாமக்கல் தெற்கு மாவட்டம், மோகனூர் ஒருங்கிணைந்த ஒன்றியம் மற்றும் நாமக்கல் கிழக்கு ஒன்றியம் இணைந்து நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாதேஸ்வரன் எம்பி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் மோகனூர் தெற்கு ஒன்றிய செயலாளராக என்பிடி.நவலடி, நாமக்கல் கிழக்கு ஒன்றிய செயலாளராக செல்வபாரதி மற்றும் நாமக்கல் கிழக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளராக பெருமாள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், வருகின்ற சட்டமன்ற தேர்தல் பூத் கமிட்டி குறித்தும், மோகனூர் ஒருங்கிணைந்த ஒன்றியம் சார்பாக பொதுக்கூட்டம் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட விவசாய அணி செயலாளர் திசா கமிட்டி உறுப்பினருமான ரவிச்சந்திரன், பொருளாளர் சசிகுமார், நாமக்கல் தெற்கு மாவட்ட இணை செயலாளர் தமிழரசு, நாமக்கல் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருள்மணி, நாமக்கல் தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் (நாமக்கல் சட்டமன்றம்) பிரேமலதா, ஒருங்கிணைந்த மோகனூர் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் சுதா, மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார், நாமக்கல் கிழக்கு ஒன்றிய தலைவர் கவாஸ்கர், மோகனூர் கிழக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் கார்த்தி, மோகனூர் நகரச் செயலாளர் செல்வராஜ், சேந்தமங்கலம் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை ஒன்றிய தலைவர் கேஜிஎஸ் கணேசன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
