ராசிபுரம் அருகே கள்ளக்காதல் தொடர்பாக தொழிலாளி அடித்துக் கொலை. இருவர் கைது...

ராசிபுரம் அருகே கள்ளக்காதல் தொடர்பாக தொழிலாளி அடித்துக் கொலை. இருவர் கைது...
X
ராசிபுரம் அருகே கள்ளக்காதல் தொடர்பாக தொழிலாளி அடித்துக் கொலை. இருவர் கைது...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கோனேரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து என்பவரது மகன் லோகநாதன்(52) கம்பி கட்டும் தொழில் செய்து வருகிறார்.இவர் கடந்த சனிக்கிழமை இரவு 8.15 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை இதனால் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்துள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை சம்பவம் தொடர்பாக லோகநாதனின் மனைவி மணிமேகலை ராசிபுரம் காவல் நிலையத்தில் தனது கணவர் லோகநாதன் காணவில்லை என புகார் தெரிவித்திருந்தார்.அதன் அடிப்படையில் ராசிபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை நாமக்கல் அருகே சேலம் கரூர் தேசிய நெடுஞ்சாலை நல்லிபாளையம் KS தாபா அருகில் ஆண் சடலம் ஒன்று சடலமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் அங்கு நாமக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் இவர் கோனேரிப்பட்டி பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பது தெரியவந்தது. பின்னர் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீசார் மற்றும் ராசிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் ராசிபுரம் நகர் VAO சரவணனிடம் LIC பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் மணி (எ) சரவணன்(42), ரமேஷ் என்பவரது மகன் பாம்பு (எ)வைரமுத்து(36) ஆகிய 2 பேர் லோகநாதன் கொலை செய்ததாக சரணடைந்தனர். பின்னர் சரணடைந்த இருவரையும் VAO சரவணன் ராசிபுரம் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் மணி (எ) சரவணன் கூறுகையில், லோகநாதன் ஒரு பெண்ணிடம் பழகி வந்ததாகவும் அந்த பெண் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தன்னிடம் பழகி வந்ததாகவும், இதனை அறிந்த லோகநாதன் பலமுறை அப்பெண்ணை கண்டித்ததாகவும் தகாத வார்த்தைகளால் பேசி அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அப்பெண் தற்போதைய காதலன் சரவணனிடம் கூறி உள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த சரவணன் லோகநாதன் கண்டித்ததாகவும், தொடர்ந்து லோகநாதன் அப்பெண்ணை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு லோகநாதன் தொலைபேசிக்கு சரவணன் அழைத்து வெளியே செல்லலாம் என அழைத்துள்ளார். பின்னர் சரவணன் அவரது அக்கா மகன் வைரமுத்து ஆகிய இருவரும் காரில் லோகநாதன் ஏற்றிக்கொண்டு ஆண்டகலூர்கேட் பகுதி நோக்கி சென்றுள்ளனர். அப்போது அப்ப பெண் குறித்து சரவணன் லோகநாதன் இடம் கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சரவணன், பின் இருக்கையில் இருந்த மச்சான் உதவி உடன் லோகநாதன் கழுத்தில் வைரமுத்து துண்டை போட்டு இறுக்கி பிடித்துக் கொண்டார்.பின்னர் காரை ஒட்டிச்சென்ற சரவணன் காரை சாலை ஓரமாக நிறுத்தி லோகநாதனை,சரவணன் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார். லோகநாதனின் உடலை சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிற்கு எடுத்துச் சென்று நாமக்கல் நல்லிபாளையம் காவல் நிலையை எல்லையில் வீசி சென்று ஒன்றும் தெரியாதது போல் சரவணன் மற்றும் அவரது மச்சான் வைரமுத்து ஆகிய இருவரும் ராசிபுரம் வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார். பின்னர் இருவரையும் ராசிபுரம் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்து சிறையில் சிறையில் அடைத்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் மணி (எ) சரவணன் தனது மகள் திருமண நிகழ்வானது காலையில் நடைபெற உள்ள நிலையில் அப்போது கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ராசிபுரம் காவல் நிலையத்தில் சரவணன் ரவுடி பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது....
Next Story