கார் மோதி அடையாளம் தெரியாத நபர் பலி

X
Komarapalayam King 24x7 |3 Dec 2025 8:40 PM ISTகுமாரபாளையத்தில் கார் மோதி அடையாளம் தெரியாத நபர் பலியானார்.
குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை, வட்டமலை பகுதியில், நேற்றுமுன்தினம் இரவு 07:00 மணியளவில், 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாலையை நடந்து கடந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஹோண்டா கார் ஒன்று, இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு இவரை அழைத்து வந்தனர். இவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து வி.ஏ.ஓ. தியாகராஜன் புகார் கொடுக்க, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய நபர் கோவை, வால்பாறை பகுதியை சேர்ந்த சூரியகிருஷ்ணன், 18, என்ற, வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. பயின்று வரும் மாணவர் என்பது தெரியவந்தது. இது குறித்து மேலும் விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story
