ராசிபுரத்தில் கார்த்திகை திருநாள் சுவாமி திருவீதி உலா: சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது..

X
Rasipuram King 24x7 |3 Dec 2025 9:11 PM ISTராசிபுரத்தில் கார்த்திகை திருநாள் சுவாமி திருவீதி உலா: சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் கார்த்திகை தீப திருநாளை தொடர்ந்து தர்மசம்வர்த்தினி உடனமர் ஸ்ரீகைலாசநாதர் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக ஆலயத்தில் இருந்து சப்பரத்தில் அழைத்துவரப்பட்ட ஸ்ரீகைலாசாநாதர் நகரின் முக்கிய வீதி வழியாக வந்தார். பின்னர் ராசிபுரம் கச்சேரி வீதி செங்குட்டு வினாயகர் கோவில் முன்பாக ஸ்ரீகைலாசநாதர் ஆலய அர்ச்சகர் சிவஸ்ரீ ஸ்ரீமதுதில்லை நாதசுவாமிகள் தலைமயில் கார்த்திகை திருநாளை தொடர்ந்து சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சொக்கப்பனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்..
Next Story
