மலைக் கொழுந்தீஸ்வரர் குடவரை கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.*

Srivilliputhur King 24x7 |3 Dec 2025 9:12 PM ISTவத்திராயிருப்பு அருகே மலைக் கொழுந்தீஸ்வரர் குடவரை கோவிலில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது.*
. வத்திராயிருப்பு அருகே மலைக் கொழுந்தீஸ்வரர் குடவரை கோவிலில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மூவரைவென்றான் கிராமத்தில் பழமை வாய்ந்த குடவரை கோவிலான மலைக்கொழுந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் குடவரை கோவிலில் இன்று கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு கடல்மட்டத்தில் இருந்து 1000 அடி உச்சியில் அமைக்கப்பட்டுள்ள பீடத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. 108 கிலோ நெய், 118 மீட்டர் திரி கொண்டு அமைக்கப்பட்டுள்ள மகா தீப கோப்பரையில் சரியாக 6.15 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மலை மீது ஏறி தீப தரிசனம் செய்தனர்.
Next Story
