கார்த்திகை மகா தீபம் மற்றும் சொக்க பனை கொளுத்துதல்

கார்த்திகை மகா தீபம் மற்றும் சொக்க பனை கொளுத்துதல்
X
ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் சார்பில், உலக மக்கள் நலன் கருதி ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் சொக்க பனை ஏற்றப்படுகிறது. இதன்படி கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நேற்று பரணி தீபம் ஏற்றப்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. அதனை தொடர்ந்து காலை அஸ்வபூஜை, கோபூஜை நடைபெற்றது
பெரம்பலூர் டவுன் சங்குபேட்டையில் கார்த்திகை மகா தீபம் மற்றும் சொக்க பனை கொளுத்துதல் பெரம்பலூர் டவுன் சங்குபேட்டையில் நேற்று முன்தினம் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மகா தீபம் மற்றும் சொக்கபனை ஏற்றப்பட்டது. ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் சார்பில், உலக மக்கள் நலன் கருதி ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் சொக்க பனை ஏற்றப்படுகிறது. இதன்படி கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நேற்று பரணி தீபம் ஏற்றப்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. அதனை தொடர்ந்து காலை அஸ்வபூஜை, கோபூஜை நடந்தது. பின்னர் சொக்கபனை வைத்து பூஜைகள் நடத்தப்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலை ஊர்வலமாக வலம் வந்து சொக்கப்பனை ஏற்றப்பட்டது. பெரம்பலூர் டவுன் சங்குபேட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் அறங்காவல் நிர்வாகி கண்ணபிரான் தலைமையில் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் மகா தீபத்தை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தலைமை பூசாரி வெ.நீதிதேவன் சொக்க பனையை ஏற்றி வைத்தார்.நெய்யுடன், நல் லெண்ணெய், இலுப்பை எண்ணெய் மற்றும் ,கற்பூரம் கொண்டு மகாதீபம், சொக்க பனை ஏற்றப்பட்டது. வானவேடிக்கை நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை கிராம காரியஸ்தர்கள் சக்கரவர்த்தி, கனகராஜ், ஹரிபாஸ்கர், சுப்பிரமணி,ரத்தினவேல்,அழகுமுத்து, மூப்பனார் கோயில் பூசாரி ரமேஷ்,மற்றும் மெய்யன்பர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story