ராமநாதபுரம் வாக்காளர் பட்டியலில் குளறுபடி

வாக்காளர் தீவிர திருத்தப்பணியில் குளறுபடி உயிருடன் இருப்பவரை இறந்ததாக பதிவு செய்துள்ளது
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கான எஸ்ஐஆர் வாக்காளர் தீவிர திருத்த பணி ஒரு நிகழ்வாக புதன்கிழமை அன்று முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இறந்தவர்கள், முகவரியில் நிரந்தரமாக வசிக்காதவர்கள் என பட்டியில் விடுதிறப்பட்டது இந்த பட்டியலில் பெரும்பாலானோர் உயிருடன் இருப்பவர்களை இறந்ததாக பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக குறிப்பிட வேண்டுமென்றால் தீக்கதிர் நாளிதழில் இராமநாதபுரம் மாவட்ட செய்தியாளராக பணியாற்றி வரும் முத்துமணி என்பவர் இறந்துவிட்டதாக தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட இறப்பு மற்றும் நிரந்தரமாக வசிக்காதவர்கள் பட்டியலில் வெளியிட்டுள்ளது இதுபோன்ற குளறுபடிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடர்ந்து செய்து வருகிறது
Next Story