இன்ஸ்டாகிராமில் காதல் திருமணம் ஆன மூன்று நாளில் மணப்பெண்ணுக்கு குழந்தைகள் இருப்பது அம்பலம்மணமகன் வீட்டார் அதிர்ச்சி.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுார் அருகே பாண்டமங்கலத்தைச் சேர்ந்த குமார் மகன் ஸ்ரீதர் ( வயது34 ), பெங்களூரில் ஐ.டி., கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

இதேப்போல திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே சிவந்திபுரத்தைச் சேர்ந்த ராமசாமி, அமுதா தம்பதியரின் மகள் மகா ஸ்ரீ ( வயது 42 ), இவர் சென்னையில் ஐ.டி, கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் ஸ்ரீதர், மகாஸ்ரீ இருவருக்கும் இன்ஸ்டாகிராமில் கடந்த ஒரு வருடத்துக்கு முன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்துக் கொண்டனர். மேலும்,மகா ஸ்ரீ, தனக்கு 30 வயது என்றும் இன்னும் திருமணம் ஆகவில்லை என கூறியுள்ளார்.தொடர்ந்து, திருமணம் செய்து கொள்ள மகா ஸ்ரீ வற்புறுத்தியதால் தங்களது காதலை, ஸ்ரீதர் வீட்டில் சொல்லி உள்ளார்.பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும் அவர்களை சமாதானப்படுத்தி திருமணத்திற்கு பத்திரிக்கை அடித்து ஏற்பாடு செய்தனர்.இந்நிலையில் கடந்த நவம்பர் 30 ம் தேதி அதிகாலையில் நாமக்கல் அடுத்த பாண்டமங்கலம் ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் திருமணம் நடந்தது. அன்று மதியம் 12 மணிக்கு பொத்தனூரில் உள்ள சமுதாயக் கூடத்தில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.இதில் மணமகன் வீட்டார் சார்பாக உறவினர்கள் திரளாக கலந்து கொண்டனர். பெண் வீட்டார் சார்பில் பெயரளவுக்கு ஒரு சில நபர்களே கலந்து கொண்டனர்.காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியர் தங்களது குடும்ப இல்லறை வாழ்க்கையை உற்சாகமாக தொடங்கினர்.மேலும் இன்ஸ்டாகிராமில் தங்களது திருமண நிகழ்ச்சி விழா போட்டோ, வீடியோக்களை பதிவிட்டனர்.மகா ஸ்ரீ, இரண்டாம் திருமணம் செய்து கொண்டதை இன்ஸ்டாகிராம் மூலம் அறிந்த,முதல் கணவரின் உறவினர்கள், புதுமண தம்பதியரை தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில் நேற்று காலை, பாண்டமங்கலத்தில் உள்ள மாப்பிள்ளை வீட்டுக்கு காரில் வந்த மகா ஸ்ரீயின் முதல் கணவரின் உறவினர்கள் மகாஸ்ரீயை சரமாரியாக தாக்கினர்.இந்நிலையில் அப்பகுதியினர் விசாரித்த போது கடந்த 18 வருடத்திற்கு முன்பே மகா ஸ்ரீக்கு திருமணம் ஆனதும், மேலும் 15 வயதில் பெண் குழந்தையும், 13 வயதில் ஆண் குழந்தையும் இருப்பதும் தெரிய வந்தது. ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்தும், தனது வயதை குறைத்து ஏமாற்றி இளைஞரை திருமணம் செய்தது அம்பலமானது.திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் மகாஸ்ரீ யின் பெற்றோர்கள் பராமரிப்பில் இருந்து வரும் இரு குழந்தைகளையும்,முதல் கணவரின் உறவினர்கள் போலீசில் ஒப்படைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த புது மாப்பிள்ளை ஸ்ரீதர் குடும்பத்தினர், பரமத்திவேலுார் போலீசில் புகார் அளித்தனர். ஏமாற்றப்பட்டதை அறிந்த புது மாப்பிள்ளை ஸ்ரீதர் குடும்பத்தினர், மகா ஸ்ரீயை ஏற்றுக்கொள்ள மறுத்து, கட்டிய 5 பவுன் தாலி கொடியை திரும்ப பெற்றுக் கொண்டனர்.இது குறித்து, பரமத்திவேலுார் மகளிர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருமணமாகி மூன்றே நாட்களில் மணமகளின் குட்டு உடைந்ததால் மணமகன் விட்டார்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் பரமத்திவேலுார் பகுதிகளில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Next Story