மாற்றுத்திறனுடையோர் சங்கங்கள் சார்பில் காத்திருப்பு போராட்டம்

X
Komarapalayam King 24x7 |4 Dec 2025 8:57 PM ISTநாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்புசார்பில் காத்திருப்பு போராட்டம் குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் நடந்தது.
நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்புசார்பில் காத்திருப்பு போராட்டம் குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமையில் நடந்தது. முறையாக நியமன உறுப்பினர் பதவி வழங்க வேண்டும், உதவித்தொகைக்கு விண்ணப்பம் செய்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் கிடைக்கவில்லை, உடனே உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், 27 மாற்றுத்திறனுடையோருக்கு வீட்டுமனை வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இது பற்றி பழனிவேல் கூறியதாவது: காத்திருப்பு போராட்டத்தில் நாங்கள் கேட்ட 15கோரிக்கையில் 10 கோரிக்கைகள் வெற்றி கண்டது.வெற்றியை கொடுத்த குமாரபாளைம் தாசில்தார் பிரகாஸ், உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
