தென்காசி மாவட்டத்தில் இன்று நடந்த டாப் செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் இன்று நடந்த டாப் செய்திகள்
X
டிசம்பர் 4ம் தேதி இன்று தென்காசி மாவட்டத்தின் டாப் செய்திகள்
டிசம்பர் 4 தென்காசி மாவட்ட செய்தித் துளிகள் :- 1. தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், மாவட்ட பொருளாளர் வேலு ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 2. தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த வழக்கறிஞர்கள் சார்பில் வழக்கறிஞர். முத்துக்குமாரசுவாமி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பாலா அசோசியேஷன் அட்வகேட் அசோசியேசன் சார்பில் இன்று 500 பேருக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். 3. கடையம் பகுதியில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் இன்று கார்த்திகை மாத பௌர்ணமியை ஒட்டி கிரிவல நிகழ்ச்சி நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். 4. குற்றாலம் மற்றும் ஐந்தருவியல் நீர்வரத்து சீராக இருப்பதை தொடர்ந்து ஏராளமான ஐயப்ப பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். 5. புளியங்குடி, கடையநல்லூர், சுரண்டை உபமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் டிசம்பர் 6 மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 6. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு அரசு பள்ளிகளில் பள்ளி மாணவ மாணவியர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் சக்திக்கான சத்து மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது 7. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட பல சிவ ஆலயங்களில் பௌர்ணமி பூஜைகள் வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது. 8. தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் எஸ் ஐ ஆர் பணி நடைபெற்று வருவதை தொடர்ந்து தென்காசி நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிக்கு அழைப்பு விடுக்காமல் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக நகராட்சி நிர்வாகம் செயல்படுவதாக கூறி அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 9. சங்கரன்கோவில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் பாபர் மஸ்ஜித் தகர்ப்பு மற்றும் 33 ஆண்டுகளாக வக்பு வாரிய உரிமைகளை காப்போம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 6 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாலை 5 மணி அளவில் மர்கஸ் பள்ளிவாசல் முன்பு நடைபெற உள்ளதாக ஆலோசனை கூட்டத் தலைவர் திவான் ஒளி தெரிவித்துள்ளார். 10. தென்காசி மாவட்டம் , அருள்மிகு குற்றாலநாத சுவாமி திருக்கோயிலில் காணிக்கையாக வரப்பெற்ற மற்றும் அம்மனுக்கு சாத்தப்பட்ட பரிவட்டங்கள் மற்றும் சேலைகளை பிரதி ஆங்கில மாதத்தில் முதல் மற்றும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் பொது ஏலம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து டிசம்பர் 5 ஏலம் நடைபெற உள்ளதால் பொது ஏலத்தில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொள்ள கோயில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 11. தென்காசி வழக்கறிஞர் கொலையில் குற்றவாளியாக கருதப்படும் நபரின் மனைவி மற்றும் உறவினரை பிடித்து முதற்கட்டமாக போலீசார் சார்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. 12. ஆலங்குளத்தில் இருந்து தோரண மலைக்கு புதிய வழித்தடத்தில் பேருந்தும் , ஆலங்குளம் அம்பைக்கு புதிய பேருந்து தொடக்க விழாவும் ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில் ஆலங்குளம் முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார். ஆலங்குளம் சேர்மன் திவ்யா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். 13. தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உடல் நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். குசவல் காடு பகுதியில் யானை ஒன்று உடல் நலம் சிரமப்பட்டு கொண்டிருந்ததை கண்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக மருத்துவ குழு விரைந்து யானைக்கு மருத்துவ உதவி செய்தனர். ஆண் யானையாக இருக்கலாம் எனவும் யானைக்கு முப்பது வயது இருக்கலாம் எனவும் வனத்துறை தெரிவித்துள்ளது
Next Story