கருணாநிதி சிலை திறப்பு விழா.
Arani King 24x7 |4 Dec 2025 10:59 PM ISTஆரணி அருகே பைபாஸ் சாலை சந்திப்பில் கருணாநிதி சிலை திறப்பு விழா. துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஆரணி அருகே முள்ளிப்பட்டு ஹவுஸிங் போர்டு பகுதியில் பைபாஸ் சாலை சந்திப்பில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றதில் துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் திறந்துவைத்தார். இவ்விழாவில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ..வேலு தலைமை தாங்கினார். ஆரணி எம்.பியும், தி.மலை வடக்கு மாவட்டசெயலாளருமான, எம்.எஸ்.தரணிவேந்தன் அனைவரையும் வரவேற்றார். இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்து பேசியது, திமுக ஓரணியில் உள்ளது. அதிமுக கட்சியில் உள்ளவர்களே தனித்தனி அணியாக உள்ளனர். அவர்கள் எந்த அணியென்றே தெரியாது. அதிமுக கட்சியை யார் கைப்பற்றுவது என்று போட்டி போட்டிக்கொண்டு உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி கட்சியினருக்கும், மக்களுக்கும் துரோகம் செய்து வருகிறார். மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கைக்கூலியாக அதிமுகவில் உள்ளவர்கள் செயல்படுகின்றனர். பாஜகவின் திட்டம் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே தேர்தல் ஒரே மொழி என திட்டமிட்டுள்ளனர். பாஜகவை எதிர்க்கிற ஒரே கட்சி திமுகதான். சிறந்த முதல்வராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்ற சிறப்பான திராவிடமாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம். மக்கள் செல்வாக்கை குறைக்க மத்திய அரசு பல்வேறு வழிகளை கையாள்கிறது. 100 நாள் வேலை திட்டத்தில் நிதி வழங்குவதில்லை. கல்விக்கான நிதியை வழங்குவதில்லை. இவ்வாறு பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. ஆரணியில் 45 கோடி மதிப்பில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பட்டு ஜவுளி பூங்கா திட்டம் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 10ஆயிரம் நெசவாளர்கள் பயன்பெறுவர். ஆரணியிலேயே பெரிய குளமான சூரியகுளம் சீரமைக்க 5 கோடியே 80லட்சம் ஒதுக்கி பணி முடியும் தருவாயில் உள்ளது. இவ்வாறு தமிழக அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்கள் குறித்து பேசினார். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, செய்யார் எம்எல்ஏ ஓ.ஜோதி, வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமார்,மாவட்டத் துணைச் செயலாளர் ஜெயராணிரவி, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, நகரமன்றதலைவர் ஏ.சி.மணி, ஒன்றிய செயலாளர்கள் எஸ்.எஸ்.அன்பழகன், சுந்தர், துரைமாமது, மோகன், எஸ்.ராஜகுமார்,நகர பொறுப்பாளர் சைதை வ.மணிமாறன், கண்ணமங்கலம் நகர செயலாளர் கோவர்தனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆரணி எல்லையான அப்பந்தாங்கல் கூட்ரோடில் துணை முதல்வர் உதயநிதிஸ்டாலினுக்கு எம்.பி.எம்.எஸ்.தரணிவந்தன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் துணை முதல்வர் உதயநிதிஸ்டாலினுக்கு வெள்ளியிலான செங்கோலை ஆரணி எம்.பி எம்.எஸ்.தரணிவேந்தன் வழங்கினார். பின்னர் துணை முதல்வர் களம்பூர், கலசபாக்கம் வழியாக திருவண்ணாமலை சென்றார்
Next Story





