எருமப்பட்டியில் பல்வேறு பகுதிகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு!

அதிமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளர் ஸ்ரீ தேவி மோகன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து நினைவு அஞ்சலி செலுத்தினர்.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி எம்ஜிஆர் சிலை முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ஆம் ஆண்டு நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி கற்பூரம் காட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது.இதில் அதிமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளர் ஸ்ரீ தேவி மோகன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து நினைவு அஞ்சலி செலுத்தினர்.
அடுத்த ஆண்டு புரட்சி தலைவி அம்மா நினைவு நாளில் அதிமுக ஆட்சி அமைந்து எடப்பாடியார் தலைமையில் நாம் அனைவரும் நினைவு நாளை அனுசரிப்போம் என சூளூரைத்து மௌன அஞ்சலி செலுத்தினர்.இதை போல் எருமப்பட்டி மேற்கு ஒன்றியம் பழையபாளையம்,போடிநாயக்கன்பட்டி,அலங்காநத்தம் பிரிவு,அலங்காநத்தம்,பொட்டிரெட்டிபட்டி,பொன்னேரி,மற்றும் எருமப்பட்டி பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளிலும் நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கழக அமைப்பு செயலாளர் சேவல் ராஜீ,எருமப்பட்டி பேரூர் கழக செயலாளர் மெடிக்கல் பாலு, ஒன்றிய துணைச் செயலாளர் கருணாமூர்த்தி,ஒன்றிய இளைஞரணி செயலாளர் இரா.வெங்கடேஷ் மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Next Story