ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் கழிவறை வசதி இன்றி பெண்கள் முதியவர்கள் அவதி.

ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தின் அவல நிலை
ஆரணி டவுன் கோட்டை மைதானம் முன்பு வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் ஆரணி வட்டத்தில் சுமார் 90க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, கணவன் இழந்தோர் உதவித்தொகை, மற்றும் வாரிசு சான்று, இறப்புசான்று, பிறப்புச் சான்று, ஆதார் அடையாள அட்டை, போன்ற பல்வேறு தேவைகளுக்காக மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கழிவறை கட்டப்பட்ட நிலையில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரமல் செடி கொடிகள் வளர்ந்து புதர் மூடப்பட்டு காணப்படுகிறது. இதனால் மாற்றுத்திறனாளிகள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், என பலரும் புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையத்திற்கு செல்வதால் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இது குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு விடுகின்றனர். எனவே மாவட்டம் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் கழிவறை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
Next Story