தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் தமிழ்நாடு அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு டாஸ்மாக் மாவட்ட அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாமக்கல்லில், தமிழ்நாடு அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் காலி மது பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டத்தை டாஸ்மாக் ஊழியர்களை பயன்படுத்தாமல் உடனடியாக மாற்று முகமை மூலம் செயல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து கோஷங்கள் எழுப்பினர்.மேலும், தமிழக அரசு டாஸ்மாக் நிர்வாகம் காளி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை, டாஸ்மாக் ஊழியர்களை பயன்படுத்தாமல் உடனடியாக மாற்று முகமை மூலம் அமல் படுத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இந்தத் திட்டத்தை பணியாளர்கள் மீது திணிக்க கூடாது என்றும்,22 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் டாஸ்மாக் ஊழியர்களின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்., வார விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.மேலும், டாஸ்மாக் பணியில் இருந்த போது உயிரிழந்த குடும்பங்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்., என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தோஷங்கள் எழுப்பினர்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு டாஸ்மார்க் விற்பனையாளர்கள் நல சங்கம், நாமக்கல் மாவட்ட அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட சுமார் 70-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Next Story