சொக்கப்பனை எரித்த பக்தர்கள்

குமாரபாளையம் பக்தர்கள் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி சொக்கபனை எரித்து வழிபட்டனர்.
கார்த்திகை தீபத்திருநாளையொட்டி திருவண்ணாமலையில் ஜோதி எரிய விடுவ்து போல், பல இடங்களில் அந்தந்த பகுதி கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி சொக்கப்பனை எரிப்பது வழக்கம். அதுபோல் குமாரபாளையம் வட்டமலை முருகன் கோவில், தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம் பகுதியில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி, சொக்கப்பனை எரித்து வழிபட்டனர். இதில் பங்கேற்ற பக்தர்கள் அரோகரா, சிவாய நமஹா ..என கோஷமிட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story