ஆரணியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் முன்னிட்டு அன்னதானம்.\

ஆரணியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம் முன்னிட்டு பழைய பஸ்நிலையம் எம்ஜிஆர் சிலை அருகில் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆரணியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம் முன்னிட்டு பழைய பஸ்நிலையம் எம்ஜிஆர் சிலை அருகில் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி அன்னதானம் வழங்கப்பட்டது. ஆரணி அண்ணா சிலை அருகிலிருந்து மாவட்ட அவைத் தலைவர் ஆ.கோவிந்தராஜன் தலைமையில் ஊர்வலமாக ஆரணி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலை வரை சென்றனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். மேலும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். மேலும் ஆரணி- சேவூர் பைபாஸ் சாலையில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் நகர செயலாளர் அசோக்குமார் அனைவரையும் வரவேற்றார். எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஏ.ஜி.ஆனந்தன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் ஜி.வி.கஜேந்திரன், வழக்கறிஞர் க.சங்கர், ஜெயபிரகாஷ், திருமால், ஜெ பேரவை மாவட்ட செயலாளர் பாரி பி.பாபு, அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் குமரன், சதீஷ், கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மகளிர் அணி நிர்வாகி மஞ்சுளா மற்றும் கழக நிர்வாகிகள் எஸ்.ஜோதிலிங்கம், சைதை சுப்பிரமணி, அக்ராபாளையம் குணா, சித்தேரி சுரேஷ்பாபு, இ.பி.நகர் குமார் உள்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story