திருவள்ளுவர் நகர் இளைஞர் மன்றம் சார்பில் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு

பள்ளி குழந்தைகளுக்கு விலையில்லா நோட்டு, பேனா வழங்கிய நிர்வாகிகள்
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி திருவள்ளுவர் நகரில் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் ஸ்டாலின் தலைமையில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மேலும் பள்ளி குழந்தைகளுக்கு விலையில்லா நோட்டு, பேனா வழங்கப்பட்டது. இதில் மன்ற தலைவர் அசோக் குமார் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார். இதில் நிர்வாகிகள் அருண் வேல், வீரமாணிக்கம், ரோகித் சர்மா, சபரி வாசன், அகிலேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story