முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் சந்தித்துக் கொண்டதால் பரபரப்பு

X
Pallipalayam King 24x7 |6 Dec 2025 3:16 PM ISTகொங்கு திருப்பதி கோவிலில் திமுக அமைச்சரும், அதிமுக முன்னாள் அமைச்சரும் சந்தித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது ..
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கொங்கு திருப்பதி கோவிலில் தமிழக வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீவை துறை அமைச்சர் முத்துசாமி, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தங்கமணி ஆகியோர் ஒரே நேரத்தில் சாமி தரிசனம் செய்து ஐந்து நிமிடங்கள் பேசிக்கொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து முத்துசாமி கூறுகையில் கோவில் பராமரிப்பு குறித்து பேசினோம். அரசியல் குறித்தது பேசவில்லை என தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள தாஜ் நகரில் கொங்கு திருப்பதி கோவில் உள்ளது . இந்த கோவில் இந்த பகுதியில் பிரசித்தி பெற்று விளங்கிய சூழ்நிலையில், இந்த கோவில் அமைந்துள்ள இடம் வீட்டு வசதி துறைக்கு சொந்தமானது என வீட்டு வசதி துறை நிர்வாகத்தினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிலை பூட்டினர். இதனை அடுத்து இப்பகுதி மக்கள் நீதிமன்றத்திற்கு சென்றதுடன் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமியிடம் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள்படியும் தமிழக முதல்வரின் ஆலோசனையின் பேரிலும் கோவில் இந்து சமய அறநிலைத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டது . இதனையடுத்து மூன்று வருடங்கள் கழித்து கடந்த 24 ஆம் தேதி கோவில் திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இதனை அடுத்து வியாழன் அன்று கோவில் பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காகவும், தரிசனம் செய்வதற்காகவும் தமிழக வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சருமான முத்துசாமி வருகை தந்தபொழுது, அதிமுகவின் நாமக்கல் மாவட்ட அமைப்புச் செயலாளரும் , முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான தங்கமணியும் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து சாமி தரிசனம் செய்தனர் .அதனை அடுத்து இருவரும் சந்தித்து பேசிக்கொண்டனர் .கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்த அமைச்சர் முத்துசாமியிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட பொழுது முழுக்க முழுக்க சாமி தரிசனம் செய்வதற்கு வந்திருந்தோம் . அவர் உள்ளூர் பிரமுகர் என்பதால் வந்திருந்தார். கோவில் வீட்டு வசதி துறை வசம் இருந்ததால் நீதிமன்ற ஆலோசனை பெற்று தமிழக முதல்வரின் அறிவுறுத்தல் பேரிலும் கோவிலை இந்து சமய அறநிலைத்துறையிடம் ஒப்படைத்து பொதுமக்கள் வழிபாட்டிற்காக திறந்து விடப்பட்டு அதற்கு அர்ச்சர்கள் அமைக்கப்பட்டு, தினசரி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதில் அரசியல் குறித்து ஏதும் பேசவில்லை .கோவில் பராமரிப்பு பணிகளை குறித்து இருவரும் பேசிக் கொண்டதாக தெரிவித்தார்.இந்த சந்திப்பின்போது ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார் உடன் இருந்தார். ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக திமுகவில் முக்கியமான அரசியல் ஆளுமைகளாக உள்ள இருவர் சந்தித்துக் கொண்ட சம்பவம் நாமக்கல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமிக்கு மிக நெருக்கமானவராக இருக்கும் தங்கமணி முத்துசாமியை கோவில் நலனுக்காக சந்தித்ததாக கூறப்பட்டாலும் இதில் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் .. மேலும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவும், அதிமுகவின் மூத்த தலைவருமாக விளங்கிய செங்கோட்டையன் சமீபத்தில் தன்னை தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
