ராசிபுரம் அருகே போர்டபிள் அல்ட்ரா ஸ்கேன் மூலம் பாலினம் பார்த்து கூறிய நர்ஸ் உள்ளிட்ட இருவர் கைது...

ராசிபுரம் அருகே போர்டபிள் அல்ட்ரா ஸ்கேன் மூலம் பாலினம் பார்த்து கூறிய நர்ஸ் உள்ளிட்ட இருவர் கைது...
X
ராசிபுரம் அருகே போர்டபிள் அல்ட்ரா ஸ்கேன் மூலம் பாலினம் பார்த்து கூறிய நர்ஸ் உள்ளிட்ட இருவர் கைது...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா கோரையாறு பகுதியில் பணத்தை பெற்று சட்டவிரோதமாக கருவில் உள்ள குழந்தை ஆணா?,பெண்ணா?, என பாலினத்தை கண்டறிந்து கூறுவதாக ராசிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் கலைச்செல்வி அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலை அடைத்து டாக்டர் கலைச்செல்வி,மருத்துவ குழுவினர் மற்றும் நாமகிரிப்பேட்டை காவல் துறையினர் ஆகியோர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு ஒரு வீட்டில் வைத்து சட்ட விரோதமாக போர்ட்டபிள் அல்ட்ரா ஸ்கேன் மூலம் கருவில் உள்ள பாலினத்தை கண்டறியும் சோதனையில் ஈடுபட்டது தெரியவந்தது.பின்னர் சோதனையில் ஈடுபட்ட 2 பெண்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய ஸ்கேன் இயந்திரம்z மருந்து மாத்திரைகள் உள்ளிட்டவைகளை நாமகிரிப்பேட்டை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் மருத்துவ அலுவலர் டாக்டர்.கலைச்செல்வி கொடுத்த புகாரின் பெயரில் 2 பெண்களையும் நாமகிரிப்பேட்டை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் ஆத்தூர் பகுதியை சேர்ந்த கருணாகரன் என்பவரது மனைவி கலைமணி(46) என்பதும் B.SC நர்சிங் முடித்து தொடவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை செவிலியராக பணியாற்றிய போது இதே போல் சட்ட விரோதமாக கருவில் உள்ள பாலினத்தை கண்டறியும் சோதனையில் ஈடுபட்டு கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டதாகவும் அவர் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு உதவியாக செயல்பட்ட ஆத்தூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மனைவி பூமணி(45) ஆகிய இருவரும் கர்ப்பிணி பெண்களின் வீடுகளுக்கே சென்று வயிற்றில் இருப்பது ஆணா?.பெண்ணா?., என ஸ்கேன் செய்தும் அதற்கு ரூ.10,000 முதல் 25,000 வரை பணம் பெற்றதாக காவல்துறையினரும் வாக்குமூலம் அளித்தனர். பின்னர் இருவரையும் நாமகிரிப்பேட்டை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்து சேலம் சிறையில் அடைத்தனர்...
Next Story