உலக மண் தின விழாவை முன்னிட்டு விட்டமநாய்க்கன்பட்டியில் விழிப்புணர்வு முகாம் !

X
Namakkal King 24x7 |6 Dec 2025 9:01 PM ISTஉலக மண் வள தின விழா முகாமில் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கி, உலக மண் தின விழா முக்கிய நோக்கமான, வளமான மண், வளமான நகரங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.
நாமக்கல் வட்டார வேளாண்மைத்துறையின் சார்பில் விட்டமநாய்க்கன்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு மண் தின விழா முகாம் நடத்தப்பட்டது.நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா வரவேற்றார்.நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர், மல்லிகா தலைமையில் வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) கவிதா முன்னிலையில் நடைபெற்ற உலக மண் வள தின விழா முகாமில் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கி, உலக மண் தின விழா முக்கிய நோக்கமான, வளமான மண், வளமான நகரங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், ஆரோக்கியமான மண்ணின் முக்கியத்துவம், பயிர் வளர்ச்சியில் மண்ணில் உள்ள ஊட்டச்சத்தின் பங்கு, மகசூல் பெருக்கத்திற்கு உயிர் உரங்கள், நுண்ணூட்டச்சத்தின் தேவை, மண்ணின் வளங்களை பராமரித்தல், மண் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல், மண் அரிப்பைக் குறைத்தல், உணவு உற்பத்தியை உறுதி செய்தல், நீர் மேலாண்மையை மேம்படுத்துதல், மற்றும் மண் பல்லுயிர் பெருக்கத்தை உறுதி செய்தல் குறித்து விளக்கமாக பேசினார்.உலக மண் தின விழா முகாமில் திருச்செங்கோடு, நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்கள் மோகன், சந்திரசேகரன் மற்றும் கோகிலா ஆகியோர் மண் பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் மண் மாதிரி மற்றும் நீர் மாதிரி எடுக்கும் வழிமுறைகள் குறித்தும் தேவையான நேரத்தில் மண் பரிசோதனை செய்வதன் மூலம் சரிவிகித சம அளவு சத்துக்களை பயன்படுத்தி பயிரின் உற்பத்தியை அதிகரிக்கவும், மண்ணின் தன்மைக்கு ஏற்ப சரியான பயிர் ரக தேர்வு மற்றும் சரியான அளவு உர தேர்வு ஆகியவற்றை மேற்கொண்டு அதிக மகசூல் பெறலாம் என ஆலோசனை வழங்கி செயல்விளக்கமளித்தனர்.மேலும் உதவி வேளாண்மை அலுவலர் பெரியசாமி மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட அலுவலர்கள் இரமேஷ், கவிசங்கர், நதியா ஆகியோர் மேற்கண்ட உலக மண் தின விழா முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Next Story
