கல்யாண் ஸ்டோர் கேசியர் வீட்டில் திருடிய உடன் பணியாற்றும் பெண் கணினி ஆபரேட்டர் கைது

கல்யாண் ஸ்டோர் கேசியர் வீட்டில் திருடிய உடன் பணியாற்றும் பெண் கணினி ஆபரேட்டர் கைது
X
குமாரபாளையத்தில் கல்யாண் ஸ்டோர் கேசியர் வீட்டில் திருடிய உடன் பணியாற்றும் பெண் கணினி ஆபரேட்டர் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையம் வட்டமலை பகுதியில் வசிப்பவர் கார்த்திகா, 26. கல்யான் ஸ்டோர் ஒன்றில் கேசியராக பணியாற்றி வருகிறார். இவர் தன் வீட்டில் உள்ள பீரோவில் இரண்டு பவுன் தங்க செயின், மற்றும் பணம் 85 ஆயிரம் வைத்து இருந்தார். இவருடன் பணியாற்றும் கணினி ஆபரேடர் இளவரசி, 29, என்பவர், டிச. 1, இரவு இவரது வீட்டிற்கு செல்ல, கார்த்திகா வெளியில் சென்ற நேரம் பார்த்து, பீரோவில் உள்ள நகை மற்றும் பணம் பத்தாயிரம் திருடியதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் இளவரசி இரவு 11:00 மணி வரை இருந்துள்ளார். வெளியில் சென்ற கார்த்திகா , வீடு திரும்பியா பின் இளவரசி போகும் வரை பேசி அனுப்பி விட்டு, பீரோவை பார்த்து உள்ளார். அப்போது நகை, பணம் பத்தாயிரம் காணமல் போனது தெரிய வந்தது. இது குறித்து கார்த்திகா குமாரபாளையம் போலீசில் புகார் செய்ய, போலீசார் விசாரணை செய்து, நகை, பணம் திருடியது இளவரசி தான் என்பதை உறுதி செய்தனர். எனவே, , இளவரசியை குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர். இளவரசி, தன் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தன் இரு பெண் குழந்தைகள், மற்றும் ஒரு மகனுடன் சத்யா நகரில் வாழ்ந்து வந்துள்ளார்.
Next Story