ஆரணியில் அனைத்து கட்சியினர் அம்பேத்கர் சிலை மாலை அணிவித்து அனுசரிப்பு.

ஆரணி, டிச 6. அம்பேத்கரின் 69 வது நாள் நினைவு தினம் முன்னிட்டு ஆரணி சூரிய குளம் அருகில் உள்ள அவரது சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து அனுசரித்தனர்.
ஆரணி, டிச 6. அம்பேத்கரின் 69 வது நாள் நினைவு தினம் முன்னிட்டு ஆரணி சூரிய குளம் அருகில் உள்ள அவரது சிலைக்கு சனிக்கிழமை அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து அனுசரித்தனர். அதிமுக. ஆரணி அதிமுக சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் முன்னிட்டு சூரிய குளம் அருகில் உள்ள அவரது சிலைக்கு ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.இராமச்சந்திரன் மற்றும் திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் எல்.ஜெயசுதா ஆகியோர் மாலை அணிவித்து அனுசரித்தனர். மேலும் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் இதில் ஆரணி நகர செயலாளர் அசோக்குமார் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட அவைத் தலைவர் அ.கோவிந்தராஜன், ஜெ பேரவை மாவட்ட செயலாளர் பாரி பி.பாபு, ஒன்றிய செயலாளர்கள் ஜி.வி.கஜேந்திரன், ஜெயபிரகாஷ், மாவட்ட எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் ஏ.ஜி.ஆனந்தன், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் உசேன்ஷெரீப், நகர மன்ற உறுப்பினர்கள் விநாயகம், பாரதிராஜா, சதீஷ், நிர்வாகிகள் மில் சரவணன்,இ.பி.நகர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திமுக. ஆரணியில் திமுக சார்பில் திமுக சார்பில் அம்பேத்கார் நினைவு தினம் முன்னிட்டு நகர துணைசெயலாளர் பொன்.சேட்டு தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம் மாலை அணிவித்தார். இதில் ஆரணி நகரமன்றதலைவர் ஏ.சி.மணி, மாவட்டதுணைசெயலாளர் ஜெயராணிரவி, நகரபொறுப்பாளர் சைதை வ.மணிமாறன், ஒன்றியசெயலாளர்கள் எஸ்.எஸ்.அன்பழகன், சுந்தர், துரைமாமது, மோகன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் செந்தில், முன்னாள் ஒன்றியக்குழுதுணைத்தலைவர் கே.டி.ராஜேந்திரன், நகரதலைவர் அக்பர், முன்னாள் ஒன்றியகவுன்சிலர்கள்ஆ.சி.ஆரோன், ஏ.எம்.ரஞ்சித், நிர்வாகிகள் பிரேம்குமார், இளையராஜா, பி,ராஜேஷ், சுரேந்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விடுதலைசிறுத்தைகள் கட்சி. அம்பேத்கார் நினைவு தினம் முன்னிட்டு ஆரணி சூரியகுளம் அருகில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு விடுதலைசிறுத்தைகள் கட்சி சார்பில் முன்னாள் மாவட்டசெயலாளர் ம.கு.பாஸ்கரன், மாவட்டசெயலாளர் ந.முத்து ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாலை அணிவித்து அனுசரிப்பு செய்தனர். நகரசெயலாளர் மோ.ரமேஷ் அனைவரையும் வரவேற்றார். இளஞ்சிறுத்தை மாவட்ட நிர்வாகி சார்லஸ், ஒன்றிய தலைவர் வடுகசாத்து ரமேஷ், நகர தொண்டரணி செயலாளர் ந.சங்கர், திருமால், நகரதுணைசெயலாளர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.- தவெக. தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாவட்டசெயலாலர் சத்யா தலைமையில் அம்பேத்கார் சிலை்க்கு மாலை அணிவித்து அனுசரிப்பு செய்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் இதில் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சியினர் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து அனுசரித்தனர்.
Next Story