சேவூரில் மின்விளக்குகள் எரியாததால் தீப்பந்தங்கள் ஏற்றி போராட்டம்.

ஆரணி அடுத்த சேவூர் ஆதி திராவிட குடியிருப்பு பகுதியில் மின் கம்பங்களில் மின்விளக்குகள் எரியாததால் அப்பகுதி மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் தீப்பந்தங்கள் ஏற்றி போராட்டம் நடத்தினர்.
ஆரணி அடுத்த சேவூர் ஆதி திராவிட குடியிருப்பு பகுதியில் மின் கம்பங்களில் மின்விளக்குகள் எரியாததால் அப்பகுதி மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் தீப்பந்தங்கள் ஏற்றி போராட்டம் நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அந்த பகுதி தெருக்களில் உள்ள மின்விளக்குகள் நீண்ட நாட்களாக எரியவில்லை. இதுகுறித்து ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர்( கிராம ஊராட்சி) விஜயலட்சுமியிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் என் முத்து தலைமையில் நிர்வாகிகள் மின் கம்பங்களில் தீப்பந்தங்களை ஏற்றி வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என்று ஊர் பொதுமக்கள் தெரிவித்தனர்
Next Story