குளித்தலை பகுதி அரசு பள்ளி மாணவன் யோகா பொது பிரிவில் முதலிடம்

திருச்சியில் நடந்த 16 வது தமிழ்நாடு மாநில ஓப்பன் யோகாசன கிராண்ட் சாம்பியன்ஷிப் போட்டி
திருச்சி தனியார் மஹாலில் 16 வது தமிழ்நாடு மாநில ஓப்பன் யோகாசன கிராண்ட் சாம்பியன்ஷிப் போட்டி கலைக்கோவில் யோகாலயம் மற்றும் கலைக்கோவில் டிரஸ்ட் சார்பில் நடைபெற்றது. ஆறு வயது முதல் 13 வயது பிரிவு வரை உள்ள பொது பிரிவில் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இராஜேந்திரம் கிராமத்தைச் சேர்ந்த துரைமுருகன் மகன் ராகவன் என்ற மூன்றாம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவன் பொதுப் பிரிவில் முதலிடம் பிடித்தார். அவருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர். அரசு பள்ளி மாணவனுக்கு பள்ளி சார்பிலும் ஊர் பொதுமக்கள் சார்பில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்
Next Story