காங்கேயம் அருகே எல்.பி.பி. வாய்க்கால் கரையில் உள்ள பனை மரம் வெட்டி வீழ்ச்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Kangeyam King 24x7 |7 Dec 2025 6:19 PM ISTகாங்கேயம் அருகே எல்.பி.பி. வாய்க்கால் கரையில் உள்ள பனை மரம் வெட்டி விற்பனை - சமூக வலைதளங்களில் புகைப்படம் வைரல்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நத்தக்காடையூர் அருகே வெள்ளியங்காட்டில் இருந்து வடக்கே செல்லும் எல்.பி.பி வாய்க்கால் கரையில் உள்ள 45 வருடங்களுக்கும் பழமையான பனை மரங்களை சமூக விரோதிகள் வெட்டி விற்பனை செய்துள்ளனர். இரவோடு இரவாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த மரங்களை வெட்டுவதற்கு வெளியூரில் இருந்து ஆட்கள் வந்திருக்க வாய்ப்பில்லை உள்ளூரை சேர்ந்த நபர்கள்தான் இந்த செயலில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகிறது. இது குறித்து வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story




