அதிக ஒலி எழுப்பிய ஒலிப்பான்கள் பறிமுதல்

X
Pallipalayam King 24x7 |7 Dec 2025 7:25 PM ISTஅதிக ஒலி எழுப்பிய அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் ஒலிப்பான்களை போலீசார் பறிமுதல் செய்தனர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிக இரைச்சல் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சட்ட விதிகளுக்கு மாறாக அதிக ஒலி எழுப்பக் கூடிய ஒலிப்பான்களை பயன்படுத்துவதாக தொடர்ந்து பொதுமக்கள் தரப்பிலிருந்து போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதனையடுத்து சனிக்கிழமை அன்று பள்ளிபாளையம் டிஎஸ்பி கௌதமன் தலைமையிலான போலீசார் பள்ளிபாளையம் நான்கு ரோடு பகுதியில் இன்று அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அதிக சப்தம் , பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் ஏற்படுத்தும் வகையில் ஒலி எழுப்பிய ஒலிப்பான்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஐந்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 50-க்கும் மேற்பட்ட ஒலிப்பான்களை பள்ளிபாளையம் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் பள்ளிபாளையம் நான்கு ரோடு பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது....
Next Story
